நல்லா இருந்த நாடும், நாசமாக்கிய நாலு பேரும்: ராகுல் காந்தி கொந்தளிப்பு..!

நல்லா இருந்த நாடும், நாசமாக்கிய நாலு பேரும்: ராகுல் காந்தி கொந்தளிப்பு..!


rahul-gandhi-has-criticized-the-central-government-for

இந்தியா முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (க்யூட்) தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான (2022-2023) இளங்கலை பட்டபடிப்பில் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் காலை மற்றும் மாலையில்  இரு வேளைகளாக தேர்வு நடைபெற்றது. தொழில்நுட்ப குளறுபடிகளின் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 17 மாநிலங்களில் சில ட்ஹேர்வு மையங்களில் காலை வேளை தேர்வு 12 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மாலை வேளையில் நடந்த தேர்வும் இதே காரணத்திற்காக, மொத்தம் உள்ள 489 தேர்வு மையங்களிலும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று 2 வது நாளாக இந்த தேர்வுகள் தொழில்நுட்ப குளறுபடிகளின் காரணமாக ரத்தானது. மேலும், காலை வேளையில் 95 சதவீத தேர்வு மையங்களில் தேர்வுகள் தங்குதடையின்றி சுமுகமாக நடந்ததாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் கியூட் தேர்வு  2வது நாளாக 50 மையங்களில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூட் தேர்வில் நடந்த குளறுபடிகளை குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குறை கூறியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய கல்வி கொள்கையில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு தேர்வு பற்றிய விவாதம் நடைபெறுகிறது. தேர்வின்போது காகிதம் இல்லை, விவாதமும் இல்லை. தேர்வுக்கு பின்பு மாணவர்களின் எதிர்காலம் இருளில் மூழ்குவதாக கூறியுள்ளார்.

நான்கு பேருடைய சர்வாதிகார போக்கினால், நாடு நாசமடைவதற்கான எந்த ஒரு விசயமும் விட்டு வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி அந்த 4 பேர் யார் என்பது குறித்து குறிப்பிடவில்லை.