அரசியல் இந்தியா

பாஜகவை வீழ்த்த மிகப்பெரிய திட்டம் தயார்.. ராகுல் காந்தி பேட்டி !!

Summary:

டெல்லி: வெள்ளிக்கிழமை மாலைதான், லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் உரையாடலின் போது, ராகுல் பேசிய பேச்சு உலகம் முழுக்க வைரலானது. இப்போதும் கூட இணையம் முழுக்க ராகுலின் பேச்சு இணையத்தில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில், மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, செயற் குழு கூட்டத்திற்கு பின் பேசியுள்ளார். 

அவரது அந்த அதிரடி பேச்சிலிருந்து பாஜக இன்னும் வெளியேறவில்லை. அதற்குள் செயற்குழு கூட்டத்தை சிறப்பாக முன்னின்று நடத்தி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

ragul gandhi க்கான பட முடிவு

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், மல்லிகார்ஜுனா கார்கே ஆகிய முக்கிய தலைவர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

2019 தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் பெரிய அளவில் கூட்டணி வைக்கப்படும். எல்லா மாநில கட்சிக்கும் கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இப்போதே தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டது. கூட்டணியில் இடம்பெற கூடிய கட்சிகள் குறித்து பிறகு அறிவிப்போம் என்று கூறினார்.


Advertisement