"150 ஆண்டுகள் உயிர்வாழும் ரகசியம் எனக்கு தெரியும்" - நடிகர் சரத் குமார் பரபரப்பு பேச்சு..!Politician Sarath Kumar Speech

 

மதுவை அருந்திவிட்டு அன்பையும், பாசத்தையும் அதிகளவு பொழிகிறார்கள். அது தேவையில்லை. செல்போன் வந்ததால் உலகளவில் நடந்தவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டோம் என சரத் குமார் பேசினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமார் சென்னையில் நடைபெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் தனது தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "எனக்கு 69 வயது ஆகிவிட்டது. ஆனாலும், நான் 25 வயது இளைஞனை போல இருக்கிறேன்.

நான் 150 வயது வரை இருப்பேன். அந்த வித்தையை நான் கற்று வைத்துள்ளேன். அந்த வித்தையை நான் நீங்கள் என்னை முதல்வர் அரியணையில் ஏற்றும்போது சொல்வேன். இப்போது சொல்லமாட்டேன். 2026ல் என்னை அரியணையில் ஏற்றுங்கள். உழைப்பு, உயர்வு, நேர்மை இருக்கும்போது, மக்களுக்கு தேவையுள்ளதை எடுத்துரைக்க வேண்டும்.

மதுபானத்தால் கடன் தொல்லை அதிகரிக்கும். கடன், மன உளைச்சல் என மதுபானம் அருந்தினால், கடன் இரட்டிப்பாகிக்கொண்டே இருக்கும். இதே கூட்டத்தில் மதுவை அருந்திவிட்டு அன்பையும், பாசத்தையும் அதிகளவு பொழிகிறார்கள். அது தேவையில்லை. குடியை விட்டாலே அனைவர்க்கும் நன்மை, நிம்மதி, அன்பு, பாசம் கிடைக்கும்" என்று பேசினார்.