விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
பிரச்சாரத்தில் கர்ஜிக்க வருகிறார் கேப்டன்; ஆனால் இந்த முறை சற்று வித்தியாசம் என்ன தெரியுமா?
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் போன்று உருவம் கொண்ட ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலில் களமிறங்கும் அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்று அவரது தொண்டர்கள் காத்து கிடக்கின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தேமுதிக பொருளாளரும் அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டாலும் உரையாற்றுவாரா என்பது சந்தேகமே. ஏனெனில் அவரது உடல்நிலை இன்னும் பூரணமாக குணம் அடையவில்லை என்பதாக தெரிகிறது.
இந்நிலையில், அவருக்குப் பதிலாக அவரைப் போன்ற சாயல் கொண்ட நாமக்கலைச் சேர்ந்த குமார் என்பவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார். விஜயகாந்த் போன்ற தோற்றத்தில் இருந்து வரும் குமாருக்கு வயது 46. பல்வேறு மேடைகளில் தோன்றி, விஜயகாந்த் போன்று பேசி நடித்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த குமார் கூறும்போது: 'கேப்டனுக்கு இந்த முறை சிறிது உடல்நலம் சரியில்லை என்பதால நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். மருத்துவர்கள் அவரை பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆதலால் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்பார். ஆனால், பேசமாட்டார். விரைவில் அவர் உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறேன். அவருக்காக நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்றார்.