"ஸ்கூலுக்கு கூட போகல.. விஜயை பார்க்க வந்திருக்கேன்" பரந்தூரில் இளம்பெண் பேட்டி.!



paranthur student speech about tvk vijay

கிராம மக்கள் எதிர்ப்பு 

சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பரந்தூரில் 29 ஆயிரம் கோடி மதிப்பில் ஏர்போர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், இதனை அமல்படுத்த விவசாய நிலங்களை அரசு அபகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

லட்சங்கள் வேண்டாம் 

நல்வாழ், புடவூர், தண்டலம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் 4791 ஏக்கர் நிலம் இதற்காக கையகப்படுத்தப்பட இருக்கின்றது. இதில், 3466 ஏக்கர் நன்செய் நிலம் ஆகும். எனவே, அப்பகுதி விவசாயிகள் எத்தனை லட்சம் கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம். விவசாயம் செய்ய எங்களை விடுங்கள் என்று கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கனிமவளக்கொல்லையை எதிர்த்த அதிமுக நிர்வாகி கொலை.. இறுதியாக கொடுத்த பேட்டி.. என்ன சொன்னார் தெரியுமா?

Paranthur

பசுமை விவசாயம் வேண்டும்

இந்த நிலையில் அந்தப் பகுதி விவசாயிகளை சந்திக்க விஜய் இன்று சென்றுள்ளார். இது பற்றி மாணவி ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த பெண், "பசுமை விமான நிலையம் எதுவும் எங்களுக்கு வேண்டாம். பசுமையாக விவசாயம் செய்ய விடுங்கள்.

விஜய்க்காக விடுமுறை

பல தலைவர்கள் வந்தார்கள், சென்றார்கள். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. தற்போது விஜயிடம் எங்கள் கோரிக்கையை வைக்க நாங்கள் செல்கிறோம். மாற்றம் நிகழும் என்று நம்புகிறோம். எனவே, பள்ளி கல்லூரிக்கு கூட செல்லாமல் விஜயை பார்க்க நாங்கள் வந்துள்ளோம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கடன்கார, குடிகார மாநிலமாக தமிழ்நாடு - அண்ணாமலை பேச்சு.!