AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
அனல் பறக்கும் செங்கோட்டையனின் ஆட்டம்! அடுத்தடுத்து தவெக-வுக்கு வரும் முக்கிய புள்ளிகள்! டிசம்பர் 15-ல் நடக்க போகும் மெகா சம்பவம்! செம சந்தோஷத்தில் விஜய்!
தமிழக அரசியல் சூழலில் புதிய அரசியல் பரபரப்பு உருவாகி வரும் நிலையில், பல முக்கிய முன்னேற்றங்கள் ஒன்றோடொன்று நடைபெற்று வருகின்றன. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் இணைந்த பின்னணி
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்ததைத் தொடர்ந்து கோபி தொகுதியில் பலர் அவரைத் தொடர்ந்து கட்சியில் இணைந்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகின்ற செங்கோட்டையன், அண்மையில் கோபி தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்! "ஒரு நாள் பொறுத்திருங்கள் " செங்கோட்டையனின் பதில்! தூக்குக ஆள அளேக்கா சலசலப்பு!
நடராஜன் – செங்கோட்டையன் சந்திப்பு
செங்கோட்டையனின் இந்த மாற்றத்தின் பின்னணியில், ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் அவரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடராஜனின் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 15 – முக்கிய அரசியல் நாள்?
இந்த சந்திப்பில், டிசம்பர் 15ஆம் தேதி வரை பொறுத்திருக்கும்மாறு செங்கோட்டையன் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. காரணம், அந்த தினமே ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய அடுத்த அரசியல் முடிவு குறித்து அறிவிக்க உள்ளார் என கூறப்படுகிறது. அவர் புதிய கட்சி தொடங்குகிறாரா அல்லது வேறு கட்சியில் இணைய்கிறாரா என்பது அந்நாளில் தெளிவாகும்.
இந்நிலையில் பல அதிமுக தலைவர்கள் செங்கோட்டையனின் அரசியல் நடவடிக்கைகளை மிக நெருக்கமாக கவனித்து வருவது தமிழக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.