நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
"விஜய் மட்டுமல்ல யாராலும் எடப்பாடி பழனிச்சாமியை தடுக்க முடியாது..." முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி.!!
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதை விஜய் மட்டுமல்ல யாராலும் தடுக்க முடியாது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்திருக்கிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று திமுக அரசின் குறைகளை கூறி மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மதுரை திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி எழுச்சி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது தொடர்பாக திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கூட்டமும் மதுரையில் தான் நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் 2010 ஆம் வருடம் தனது கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு 2011 இல் மீண்டும் முதலமைச்சரானார். அதே போல எடப்பாடி பழனிச்சாமியும் கோட்டைக்கு செல்வார் என தெரிவித்தார்.

திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வராது என்பது வரலாறு. இந்த முறை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவது உறுதி என தெரிவித்திருக்கிறார். மேலும் ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி தனது கட்சியை ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை தற்போது தனது கட்சியை கலைத்து விட்டார். இதே போன்ற ஒரு நிலைமை தான் நடிகர் விஜய்க்கும் வரும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "நமக்கு எதுக்கு வம்பு... அப்புறம் எங்கள கட்சில இருந்து தூக்கிருவாரு இபிஎஸ்.." முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!
மேலும் விஜய் மட்டுமல்ல யாராலும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதை தடுக்க முடியாது எனவும் அவர் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக நிறைவேற்றாத திட்டங்கள் பற்றியும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் பற்றியும் பொது மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். அதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமங்கலம் கூட்டத்திற்கு வருவதற்கு கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: "வாய்ப்பில்ல ராஜா... முடிந்தால் திமுக அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றட்டும்..." முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி.!!