கனிமொழிக்கு பெரிய பதவி.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.!

கனிமொழிக்கு பெரிய பதவி.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.!


new post for kanimozhi

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.,யுமான, கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து பெற்றார்.