"இது தான் புதிய இந்தியாவா..?" கோபத்தின் உச்சத்தில் ராகுல் காந்தி

"இது தான் புதிய இந்தியாவா..?" கோபத்தின் உச்சத்தில் ராகுல் காந்தி


New india  Rahul talk

மோடியின் மிருக்கத்தனமான புதிய இந்தியாவில், மனித தன்மைக்குப் பதிலாக வெறுப்பு உணர்வு அதிகரித்து, மக்கள் நசுக்கப்பட்டு உயிரை விடுகிறார்கள் என ராகுல் மோடியின் அரசை மிக கடுமையாக சாடியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அல்வார் பகுதியில், சில தினங்களுக்கு முன் பசுவைக் கடத்த முயன்றதாக இரண்டு நபரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில், சம்பவ இடத்திலேயே அக்பர் கான் என்பவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதல் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். மாநிலத்தில் பல இடங்களில் நீதி கேட்டு மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருகின்றனர்.

rajastan

ராம்கர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பசு கடத்தியதாக ரக்பர் கான் என்ற 28 வயது வாலிபர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

குற்றுயிராக இருந்த அந்த வாலிபரை தூக்கிச் சென்ற போலீசார், அவருக்கு முதலுதவி அளிக்க அக்கறை காட்டாமல் முதலில் பசுவை பாதுகாப்பான இடத்தில் விடுவதில் ஆர்வம் காட்டினர்.

அந்த வாலிபரை சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆசுவாசமாக ஒரு டீக்கடையில் வாகனத்தை நிறுத்தி சற்றுநேரம் களைப்பாறி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

rajastan

இப்போது அல்வார் தாக்குதல் விவகாரத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு போலீஸ் காட்டிய அலட்சியம் தொடர்பான செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, உயிருக்கு போராடிய அக்பர் கானை 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணிநேரம் போலீசார் எடுத்துள்ளார்கள் ஏன்? அவர்கள் செல்லும் வழியில் டி-ப்ரேக் எடுத்துள்ளனர். இதுதான் மோடியின் ஒரு மிருகத்தனமான இந்தியா, இங்கு மனிதநேயம், வெறுப்பால் அகற்றப்பட்டுள்ளது, மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என கடும் கோபத்துடன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.