காங்கிரஸ் சார்பில் தேர்தலில் களமிறங்கும் 'நாட்டு நாட்டு' பாடகர்!!Naatu Naatu song writer participate in election

69ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம் என பல பிரிவுகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

'புஷ்பா' படத்துக்காக அல்லுஅர்ஜூனுக்கு சிறந்த நடிகர் விருது, 'கங்குபாய் கதியாவாடி' படத்தில் நடித்த அலியா பட் மற்றும் 'மிமி' படத்தில் நடித்த கீர்த்தி சனோன் ஆகியோருக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாதத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது, தமிழில் சிறந்த படமாக 'கடைசி விவசாயி' படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் சிறந்த சண்டை காட்சி, சிறந்த நடன காட்சி, சிறந்த பாடல் என்று பல வகையில் விருதுகளை குவித்துள்ளது.

இந்த நிலையில், RRR திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் பிரபலம் அடைந்தது. இந்த பாடலுக்கும் ஆஸ்கார் விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

இப்பாடலை எழுதிய ராகுல் சிப்லி கஞ்ச், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விண்ணப்பம் அளித்திருக்கிறார். மேலும், இவர் கோஷமஹால் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.