அரசியல் தமிழகம் TN Election 2021

திமுகவில் இருந்து விலகி காலையில் பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ-வுக்கு மாலையில் காத்திருந்த அதிர்ஷ்டம்.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. தற்போது  அனைத்து கட்சிகளும் கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்காத விரக்தியில் ஒருசில முக்கிய நிர்வாகிகள் தங்காள் இருக்கும் கட்சியில் இருந்து மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பரங்குன்றம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்துவரும் திமுக கட்சியியை சேர்ந்த திரு. சரவணன் திமுகவில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்துள்ளார்.

நேற்று காலை பா.ஜ.க-வில் இணைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. சரவணன் காலையில் கட்சியில் சேர்ந்து மாலையில் சீட்டு கிடைத்ததால் அவர் அதிர்ஷ்டசாலி தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


Advertisement