அரசியல் தமிழகம்

கருணாநிதிக்கு செய்த மரியாதை நாங்கள் போட்ட பிச்சை!. அமைச்சர் பரபரப்பு பேச்சு!.

Summary:

கருணாநிதிக்கு செய்த மரியாதை நாங்கள் போட்ட பிச்சை!. அமைச்சர் பரபரப்பு பேச்சு!.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட அரசு மரியாதை, அதிமுக அரசு போட்ட பிச்சை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார். 

அதில் பேசிய கடம்பூர் ராஜூ, தமிழக முதலமைச்சராக கருணாநிதி 5 முறை பதவி வகித்துள்ளார். முதலமைச்சராக இருந்தபோது இறந்திருந்தால் எல்லா மரியாதையும் கிடைத்திருக்கும். இப்போது அரசு மரியாதை கிடைத்திருக்கிறது என்றால் அது அதிமுக அரசு போட்ட பிச்சை. 

போனால் போகட்டும் என நான்தான் பெருந்தன்மையுடன் கையெழுத்து போட்டேன். அதன்பின் முதலமைச்சரும் கையெழுத்து போட்டார். அதனால் இன்று கருணாநிதி சமாதியே மெரினாவில் இருக்கிறது என்று கூறினார்.


Advertisement