அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி!
விஜய்யை பார்த்து எனக்கு பயம் இல்லை.... காலை தூக்கி காட்டி மன்சூர் அலிகான் சொன்ன வார்த்தை! பேட்டியால் அரசியலில் பரபரப்பு...!
தமிழகத்தில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் சூழல் அதிகரித்த பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கிய பிறகு, விஜயின் அரசியல் பயணம் எந்த திசையில் செல்லும் என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
விஜயை குறிவைத்து மன்சூர் அலிகானின் கடும் விமர்சனம்
விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து பல விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவர் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்களை சந்தித்த போது விஜயை கடுமையாக விமர்சித்தார். பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிகள் அனைத்தும் பாசிச சிந்தனை கொண்டவை என்றும், தமிழ்நாட்டிற்கு பலன் அளிக்காதவை என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி இது தான் நடக்கும்! தவெக விஜய்யின் கூட்டணி...... அரசியலில் அடித்து பேசிய டிடிவி தினகரன்..!
“2026ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” – மன்சூர் அலிகான்
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியில் அமரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். “நான் கூட அந்தக் கட்சிக்காகவே போராடுவேன். இந்த காலை தரையில் கால் பதித்து மக்களிடம் செல்வேன்; விஜய் போல வானத்தில் சுற்றக்கூடாது,” என அவர் சவால் விட்டார். மார்க்கெட்டுகள், வயல்வெளிகள், சாலைகளில் மக்கள் நடுவே நிற்பதே அரசியல்வாதியின் கடமை என அவர் வலியுறுத்தினார்.
“விஜயிடம் பயமில்லை” – நேரடியான சவால்
“விஜய் போன்ற வான தூதுவர்களாக இருக்கக்கூடாது, விமானத்தில் வருபவர்களுக்கு பல்லாக்கு கிடைக்கும் என்றும், அண்ணா போல் மக்கள் மனங்களில் நிலைக்க வேண்டும்”, ஆனால் இன்றைய தலைவர் என்று சொல்லிக் கொண்டு வருபவர் எல்லாம் அப்படியா இருக்காங்க? ஆனால் விஜய் இப்படி இருந்தால் ஒன்றுமே பண்ண முடியாது, ஒரு ஆணியும் புடுங்க முடியாது. அரசியல் களத்தில் விஜய் எனக்கு இணையானவர் கிடையாது. அவரைப் பார்த்து நான் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. என்று மன்சூர் அலிகான் கூர்மையான கருத்துகளை பகிர்ந்தார். மேலும், " அவர் மக்களுக்காக வந்திருக்கிறார், அவரிடம் பணம் இருக்கிறது, செலவு செய்து செய்யட்டும்” என்றார்.
மன்சூர் அலிகானின் இக்கருத்துகள் தமிழக அரசியல் அரங்கில் பெரும் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது. விஜய் அரசியல் பயணத்தில் இத்தகைய விமர்சனங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனமாகியுள்ளது. இந்த சூழல் வரவிருக்கும் தமிழக தேர்தலின் மீது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சி! ஒவ்வொரு தொகுதியிலும் 50,00 ஆயிரம் வாக்குகள்.... யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.!