தி.மு.கழகத்தை சுமக்க தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!



M K Stalin completed a 5 years of leadership in DMK

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவை வழிநடத்த துவங்கி 5 ஆண்டுகள் நிறைவு. 

திமுகாவில் தலைமையேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறுகையில்:-

"தன்னிகரற்ற தலைவர் கலைஞர் தன் தோளிலும் நெஞ்சிலும் அரைநூற்றாண்டு காலம் சுமந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் சுமக்கத் தொடங்கி இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி! காரணம், உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும்.

நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, #INDIA முழுவதற்குமான விடியலைத் தருவோம்! மதவாத இருட்டை விரட்டியடிப்போம்! காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.