அர்சுனனாக ஸ்டாலினும், கிருஷ்ணராக உதயநிதியும்... திருப்பூர் திமுகவினர் போஸ்டர் வைரல்..! 

அர்சுனனாக ஸ்டாலினும், கிருஷ்ணராக உதயநிதியும்... திருப்பூர் திமுகவினர் போஸ்டர் வைரல்..! 


M k Stalin and uthayanithi tripur poster gone viral

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதல்வராகவும், திமுக தலைவராகவும் இருக்கிறார். 

அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், முன்னதாகவே இளைஞரணி செயலாளர் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டு, அதனை சிறப்புடன் கவனித்து வந்தார். 

சற்றும் எதிர்பாராத நேரத்தில் சூழ்நிலை காரணமாக அவருக்கு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுவிட, திரைத்துறைக்கு இடைவெளி விட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், மக்களுக்காக முழுநேர அரசியல் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். 

tamilnadu political

இந்த நிலையில், அவரின் கண்ணை நம்பாதே திரைப்படம் சமீபத்தில் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு திருப்பூர் திமுகவினர் விளம்பர பதாகை வைத்துள்ளது வைரலாகியுள்ளது. 

அந்த பதாகையில் உள்ள படைத்தல், மகாபாரத போரில் அர்ச்சுனனுக்கு கண்ணன் தேர் இயக்கியதை போல, முதல்வர் ஸ்டாலின் தேரில் அமர்ந்து இருக்க, அமைச்சர் உதயநிதி தேரை இயக்குகிறார்.