அரசியல் இந்தியா

"4 ஆண்டு சீரழிவை சரி செய்ய 40 ஆண்டுகள் தேவை" - பாஜகாவை சீண்டும் குஷ்பு

Summary:

Kushboo talks against bjp

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுமாகி இன்று ஒரு அரசியல்வாதியாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. 

2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார். 2014இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் 26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்து வரும் குஷ்பு சமீபத்தில் சிபிஐ-யில் நடைபெறும் குழப்பங்கள் தொடர்பாக பாஜகா-வை கடுமையாக விமர்சித்து உள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிவிட்டுள்ள குஷ்பு "சிபிஐ-யில் நடைபெறும் குழப்பங்கள் பஜகாவின் ஆட்சி அதிகாரத்தை பற்றி வெளிகாட்டுகிறது. இந்த நாட்டை நீங்கள் சூறையாடியது போதும். 4 ஆண்டுகளில் நீங்கள் செய்துள்ள சீரழிவுகளை சரி செய்ய 40 ஆண்டுகள் தேவவைப்படும்" என்று பாஜகா ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் குஷ்பு.


Advertisement