கே பி ராமலிங்கம் கைது; சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பாஜகவினர்..!

கே பி ராமலிங்கம் கைது; சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பாஜகவினர்..!


kp-ramalingam-arrested-bjp-people-besieged-the-governme

பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமானவர் கே.பி.ராமலிங்கம், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க பூட்டி இருந்த கோவிலுக்குள் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி காவல்துறையினர் கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கே.பி.ராமலிங்கம் உட்பட ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பிறகு அவர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காவல்துறையினர் பாதுகாப்புடன் கே.பி.ராமலிங்கத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு 11 மணிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஈ.சி.ஜி. போன்ற மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த பா.ஜ.கவினர் மருத்துவமனையில் திரண்டனர். மேலும் கே.பி.ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். காவல்துறையினர் அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர் அதை தொடர்ந்து அங்கு அமைதி நிலவியது.