யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வயலில் இறங்கி முதல்வர் செய்த செயல், ஆச்சரியத்தில் மூழ்கிய விவசாயிகள்.!

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வயலில் இறங்கி முதல்வர் செய்த செயல், ஆச்சரியத்தில் மூழ்கிய விவசாயிகள்.!



karnataka-cheif-minister-plant-sapling-with-farmers

விவசாயிகளோடு விவசாயியாக வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கி நாற்று நட்ட கர்நாடகா முதல்வர் குமாரசாமியை கண்ட மக்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
 
சமீபகாலமாக கர்நாடகா, தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் உள்ளது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வபோது போராட்டங்களும் கிளம்புகின்றன . 

இந்நிலையில் விவசாயிகளின் கவலையை நீக்கும் விதமாக  கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற குமாரசாமி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இந்நிலையில், சீதாபுரா என்னும் கிராமத்துக்கு சென்ற கர்நாடக முதல் மந்திரி அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார்.அப்பொழுது  யாரும் எதிர்பாராத வேளையில் உடையை மாற்றிய முதலமைச்சர்,வேட்டி கட்டி நிலத்தில் இறங்கி நாற்று நட துவங்கினார். 

kumarasamy

இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்  என்றாலும் ஒரு சாதாரண விவசாயி போல வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நாற்று நட்ட நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, இங்கு  நாற்று நட்டது விளம்பரத்திற்காக இல்லை , விவசாயிகளுடன் நான் என்றும் இருப்பேன் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு செய்தேன்,

மேலும், விவசாயிகள் தற்கொலை போன்ற எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் எனவும், இனி மாதத்தில் ஒரு நாள் அனைத்து மாவட்ட விவசாயிகளுடனும் அவர்களது குறைகள் பற்றி கேட்டு அதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.