அரசியல் தமிழகம் TN Election 2021

பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்.! ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய நபர்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

காஞ்சிபுரத்தில் எங்கள் கமல்ஹாசனின் கார் கண்ணாடியை உடைத்து தாக்க முயன்றவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில்  தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கமல்ஹாசனின் கார் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார் உடன் வந்த மநீம தொண்டர்கள் அந்த நபரைப்பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொண்டர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அந்த நபரை ரத்த காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.
 


Advertisement