இறுதி நேரத்தில் ஹீரோவாக மாறிய இந்திய அணியின் இளம் வீரர்! தொடரை கைப்பற்றிய இந்தியா!

இறுதி நேரத்தில் ஹீரோவாக மாறிய இந்திய அணியின் இளம் வீரர்! தொடரை கைப்பற்றிய இந்தியா!



indian-team-won-west-indies


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்களான லிவிஸ் 21 ரன்களும், ஹோப் 42 ரன்களும் எடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.


இதனையடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 32 ரன்களும், ஹெட்மயர் 37 ரன்களும் எடுத்து வெளியேறினர். அதிரடியாக ஆடிய பூரன் 64 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.இறுதியில் பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்களை குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் இறுதியில் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.

india vs west indies

இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டும் சர்துல் தாகூர், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல் இணைத்து 122 ரன்கள் எடுத்திருந்த போது, ரோகித் சர்மா 63 ஓட்டங்களில் வெளியேறினார். 

இதனையடுத்து ராகுல் 77 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர்(7), ரிஷப் பாண்ட்(7) என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். சிறப்பாக ஆடிவந்த கோலியுடன், ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

india vs west indies
சிறப்பாக ஆடி வந்த கோலி அரைசதம் அடித்து 85 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி தோல்வி முகத்தில் இருந்தது. ஆனாலும் அடுத்து வந்த ஷர்துல் தாகூரை சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் சந்தித்த முதல் பந்திலே ஒரு அற்புதமான பவுண்டரி விளாசினார்.


இதனால் கடைசி 3 ஓவரில் இந்திய அணிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது, 48-வது ஓவரின், 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு அடித்தார். பின்னர்  49-வது ஓவரின் 2-வது பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை நோ-பாலாக வீச இந்தியா 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.