பாஜகவில் இணைந்துள்ள மு.இந்திய கிரிக்கெட் வீரர்; யார் தெரியுமா?

பாஜகவில் இணைந்துள்ள மு.இந்திய கிரிக்கெட் வீரர்; யார் தெரியுமா?


indian-player-gautham-gambhir-joing-bjp

கடந்த 2003 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் களம் இறங்கியவர் கௌதம் கம்பீர். தனது சிறப்பான செயல்பாடுகளால் சில காலம் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் உடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்கிய பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தவர்.

pjp party

அதில் 2007ஆம் ஆண்டு உலக கோப்பை T20 தொடரின் இறுதிப்போட்டியில் 54 பந்துக்கு 75 ரன்கள் மற்றும் 2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் 122 பந்துக்கு 97 ரன்கள் குவித்து இரண்டு உலகக் கோப்பையையும் இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். மேலும் சில போட்டிகளுக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

சமீப காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டெல்லி ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி போட்டி தொடரோடு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் தனது முடிவை அறிவித்தார்.

pjp party

இந்நிலையில் அவ்வப்போது பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த அவர் டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்காக டெல்லி தொகுதியை பாஜக ஒதுக்கி வைத்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளது.