AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
அடி தூள்... எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!! இபிஎஸ் காட்டில் மழை.!!
அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி கொடுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பினால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நெருக்கடி குறைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராகவும், 2021 முதல் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் அதிமுக உறுப்பினர்களின் சார்பாக உரிமையியல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி வேல்முருகன் அதிமுக தொண்டர்கள் சார்பாக உரிமையியல் வழக்கு தொடர்வதற்கு அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் இல்லாத நபர்கள் வழக்கு தொடர்வதற்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: #Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!
இந்த விசாரணையில் கட்சியின் அடிப்படை உறுப்பினரில்லாத நபர்கள் எப்படி பொதுச்செயலாளரை பிரதிநிதித்துவபடுத்த முடியும் எனவும் எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோருக்கு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை., குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!