போதைப் பொருட்கள் விற்பனையில் தமிழகம் நெ.1 மாநிலமாக விளங்குகிறது: ஜி.கே.வாசன் அதிரடி..!

போதைப் பொருட்கள் விற்பனையில் தமிழகம் நெ.1 மாநிலமாக விளங்குகிறது: ஜி.கே.வாசன் அதிரடி..!


GK Vasan states that Tamil Nadu is the No. 1 state in the sale of drugs

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதிக்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுக்கு அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் கோவில்களுக்கு வந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக ரயில் போக்குவரத்தை நீட்டிக்க வேண்டும்.

இந்துக்கள் குறித்து தி.மு.க எம்.பி, ஆ.ராசா பேசிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விட மின் கட்டண உயர்வால் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அதிகம். தமிழகத்தில் தி.மு.க. வாக்குறுதிகள் மூலம் வென்ற அரசு. ஆட்சிக்கு வந்தபிறகு வாக்குறுதிகளை நிறை வேற்ற தவறிய அரசாக இருக்கிறது.

ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு பயன் அளிக்குமே தவிர, அதனால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. தமிழகம் இன்றைக்கு போதை பொருள் விற்பனையில் தலைநிமிர்ந்த மாநிலமாக இருக்கிறது என்பது வேதனையான ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரிகள் முன்பு போதை பொருள் நடமாட்டம் அதிகனாக இருக்கிறது, போதை பொருள் நடமாட்டம் என்பது அரசின் இயலாமையை காட்டுகிறது.