Lok Sabha | "தோல்வி பயத்தில் அவதூறு பரப்பும் திமுக"... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேட்டி.!!

Lok Sabha | "தோல்வி பயத்தில் அவதூறு பரப்பும் திமுக"... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேட்டி.!!



fear-of-lose-dmk-spreading-slander-eps-blasts-cm-stalin

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக அதிமுக மற்றும் பாஜக ஆகியவை பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் களம் கலைகட்ட தொடங்கி இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் முடிவடைந்து வேட்பு மனு சரிபார்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அரசியல் களத்தை பொருத்தவரை கடந்த தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த முறை அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. சில மாதங்களுக்கு முன்பு பாஜக உடனான கூட்டணியை முறித்ததாக அதிமுக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வர இருக்கின்ற பொதுத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி எஸ்டிபிஐ தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

politicsஅந்தக் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிமுக மீது அவதூறுகளை பரப்பி வருவதாக தெரிவித்திருக்கிறார். மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மதுரை தொகுதி வேட்பாளர் சரவணன் ஆதரித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு தங்கள் மீது வீண் பழி சுமத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார் .

politicsஇது தொடர்பாக பேசிய அவர் " கருத்துக் கணிப்புகள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் களநிலவரம் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்தத் தோல்வி பயத்தில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அதிமுக குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் போது கூட்டணி தர்மத்திற்காக அமைதியாக இருந்தோம். அந்த கட்சியை விட்டு விலகிய பிறகு அவர்களது தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால் முதலமைச்சர் மற்றும் அவரது மகன்  இது பற்றிய அவதூறு பரப்பி வருகின்றனர். எப்படி இருந்தாலும் மதுரையில் அதிமுக வெற்றி உறுதி என தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.