தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
காங்கிரஸ் தலைவரின் ஹெலிகாப்டரில் சோதனை..!! கர்நாடக அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு..!!
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கார்நாடக மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது கர்நாடக அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை காரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துமகூரு மாவட்டம் திப்தூருக்கு ஹெலிக்காப்டரில் வந்தபோது, அந்த ஹெலிகாப்டரில் சோதனை செய்துள்ளனர்.
அவரது ஹெலிகாப்டரில் நடத்திய தீவிர சோதனையில், பணமோ அல்லது பரிசு பொருட்களோ சிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அந்த மாநில அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.