BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
Egg Eater பாம்பை பார்த்துள்ளீர்களா? அசுர வேகத்தில் தாக்கும் முட்டை தின்னும் பாம்பு ! பதறவைக்கும் காணொளி..
இணையத்தில் தற்போது வைரலாகி வரும் காணொளியில், முட்டை தின்னும் பாம்பு (Egg Eater Snake) தன்னை பாதுகாக்கும் விதமாக கடும் வேகத்தில் தாக்கும் காட்சிகள் பார்ப்போரையே பதற்றமடையச் செய்கின்றன.
Egg Eater பாம்பு பற்றி முக்கிய தகவல்கள்
இந்த பாம்பு இனம் விஷமற்றது மற்றும் மனிதர்களுக்கு எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது. பறவைகளின் முட்டைகளை மட்டுமே உணவாகக் கொண்டு இயற்கைச் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்காப்பு உத்தியின் வித்தியாசமான நடைமுறை
பகுறிப்பாக அமைதியான இயல்புடைய இந்த பாம்பு, எதிரிகளை எதிர்கொள்ளும் போது தன்னை சுருட்டிக்கொண்டு விரிகின்றது. பின்னர், தோலை உரசி சீறும் சத்தத்தை உருவாக்கி எதிரியின் கவனத்தை மாற்றுகிறது. இதுவே அதன் முக்கிய தற்காப்பு உத்தி ஆகும்.
இதையும் படிங்க: திக் திக் நிமிடம்.. சாப்பாட்டு மேசையில் ஊர்ந்து செல்லும் பாம்பு! வாடிக்கையாளர்களுக்கு திகிலூட்டும் ரெஸ்டாரன்ட்! வைரல் வீடியோ...
பற்கள் இல்லாத வாயிலும் முட்டை உடைக்கும் திறன்
இவை வாயில் பற்கள் இல்லாத பாம்புகள் என்றாலும், முதுகெலும்பில் பற்களைப் போல அமைந்த நீட்டிப்புகள் உள்ளன. இவை முட்டையை உடைப்பதில் பெரிதும் உதவுகின்றன. முதுகு பற்கள் கிட்டத்தட்ட 3 அங்குலம் வரை நீளமாக வளரக்கூடியவை.
வளர்ச்சியடைந்த Egg Eater பாம்பு
முழுமையாக வளர்ந்த Egg Eater பாம்பு சுமார் 60 முதல் 76 செ.மீ (24 முதல் 30 அங்குலம்) நீளத்துடன் காணப்படுகிறது. தற்போது இணையத்தில் பரவிவரும் காணொளியில், இது தற்காப்பு தந்திரத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: பாம்பை இரு கைகளிலும் அசால்ட்டாக வைத்து மாறி மாறி விளையாடிய சிறுமி! பதறவைக்கும் வீடியோ காட்சி...
