வறுமையை ஒழிக்க அர்விந்த் கெஜ்ரிவால் புதிய யோசனை: தேர்தல் பிரச்சாரத்தில் சுவாரசியம்..!

வறுமையை ஒழிக்க அர்விந்த் கெஜ்ரிவால் புதிய யோசனை: தேர்தல் பிரச்சாரத்தில் சுவாரசியம்..!



Education alone can make India the best country in the world

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முழுவீச்சில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் , நேற்று அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய கெஜ்ரிவால்  ஐ.ஐ.டி-ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து நினைவு கூர்ந்தார்.  இது குறித்து மேலும் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், " ஐ.ஐ.டி-ஜே.இ.இ-ட்ஹேர்வில் நான் 563 வது இடத்தை பிடித்ததாக கூறினார். மேலும் நேற்று காலை டெல்லியில் ஒரு அரசுப் பள்ளியில்  569 வது ரேங்க் பெற்ற ஒரு காவலாளியின் மகனைச் சந்தித்ததாகவும், அவர் ஐ.ஐ.டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் மாதம் 2 லட்சம் ஆரம்ப சம்பளத்தை பெறுவார் என்றும் கூறினார்.

இதன் மூலம் அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலை முடிவுக்கு வரும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பிள்ளைகள் சிறப்பாக கல்வி கற்பதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு தலைமுறைக்குள் பணக்காரர்களாக மாறும். கல்வியால் மட்டுமே இந்தியாவை உலகில் சிறந்த நாடாக மாற்ற முடியும்" என்று பேசியுள்ளார்.