இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி: அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்..!

தடைகளை தகர்த்து இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி: அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம் திறைவேற்றம்..!


edappadi-palaniswami-took-office-as-the-interim-general

சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ள அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்ட இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்ட விதி 20 அ- வை மாற்றம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச்செயலாளர் என்று விதி திருத்தம்.அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்றுமுதல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4 மாதங்களில் அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.