அரசியல் தமிழகம்

எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதி; திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முழு விவரம்

Summary:

Dmk alliance full detail

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி திமுக தலைமையில் தமிழகத்தில் உருவாகியுள்ளது. மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்று முடிவாகியுள்ளது. 

இந்த மெகா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம் லீக் கட்சி, கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற முடிவு இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 39, 1 பாண்டிச்சேரி என 40 தொகுதிகளுக்கான பங்கீடு தற்பொழுது உறுதியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இறுதி பங்கீடு விவரம்: திமுக 20
காங்கிரஸ் 10 
கம்யூ 2 
மார்க்ஸ் 2 
விசிக 2 
மதிமுக 1 
முஸ்லிம் லீக் 1 
கொங்கு மக்கள் 1 
ஐ ஜே கே 1 
மொத்தம் 40


Advertisement