அரசியல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

Summary:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் இருந்ததால், கடந்த வாரம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சோனியாகந்தி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிலகாலம் தங்கியிருப்பார் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.


Advertisement