வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை..! ஆளும் பா.ஜனதாவுக்கு பின்னடைவு..!!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 113 தொகுதிகளை கைப்பற்றுவது அவசியம். ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டன. 224 தொகுதிகளில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போது மின்ணனு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி, ஆளும் பா.ஜனதா 75 இடங்களிலும், காங்கிரஸ் 103 இடங்களிலும், ம.ஜ.த 16 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தான் போட்டியிட்ட தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.