#LokSabha: "பாஜக ஆட்சியில் சீனாவால் ஒரு இன்ச் நிலத்தை கூட அபகரிக்க முடியவில்லை.." உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி.!!

#LokSabha: "பாஜக ஆட்சியில் சீனாவால் ஒரு இன்ச் நிலத்தை கூட அபகரிக்க முடியவில்லை.." உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி.!!



china-didnt-occupy-an-inch-of-india-land-during-bjp-rul

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள அசாம் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

politicsஇந்தப் பிரச்சாரத்தின் போது பேசிய அமித்ஷா "பாஜகவின் 10 வருட ஆட்சி காலத்தில் சீனாவால் இந்தியாவின் ஒரு இன்ச் நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை" என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய அமித் ஷா சீனா ஆக்கிரமிப்பு அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதாக குற்றம் சாட்டியிருக்கிறார். 1962 ஆம் வருடம் சீனா இந்தியாவின் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை ஆக்கிரமித்த போது அன்றைய பிரதமர் நேரு அமைதியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

politicsசமீபத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 30 இடங்களுக்கு சீனா பெயரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.