கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
"அப்பா என்றாலே கசப்பு தான்." ஸ்டாலின் பற்றி நீதிபதி சந்துரு கருத்து.!

ஸ்டாலினை அப்பா என்று சொன்னால் என்ன தவறு என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்து இருக்கிறார்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு சமீபத்தில் பேசுகையில், "மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை முதல் ஆளாய் எதிர்க்கக்கூடிய ஒரே முதல்வர் மு க ஸ்டாலின் தான். இன்றைக்கு பல்வேறு முதலமைச்சர்கள் இருக்கின்றனர். ஆனால் நேர்மையாக திடமாக மத்திய அரசின் கொள்கைகளை தொடர்ந்து எதிர்க்க கூடியவர் நமது முதல்வர் மு க ஸ்டாலின் தான்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ள ஒரு தலைவர் தயாராகிக் கொண்டிருக்கிறார்." என்று பிரதமர் நரேந்திர மோடி பற்றி தெரிவித்த அவரிடம் ஸ்டாலினை அப்பா என்று கூறுவது குறித்து கேள்வி எழுப்புகையில், அதற்கு சந்துரு, "பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கொடுப்பவரை அப்பா என்று கூப்பிட்டால் என்ன தவறு? அப்பா எனும் சொல்லை கேட்டாலே சிலருக்கு கசப்பாக இருக்கிறது. ஏன் என்று தான் தெரியவில்லை." என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'நாங்க ஏன் நடு ராத்திரியில் சுடுகாட்டுக்கு போகணும்? 'அதிமேதாவி' களுக்கு பதிலடி - ஸ்டாலின்.!
இதையும் படிங்க: ஒவ்வொரு மாதமும் ₹.3000 உதவித்தொகை.. தேர்தலுக்காக திமுக போட்ட பலே திட்டம்.!