அரசியல் இந்தியா

தாத்தாவையும் மிஞ்சிய பேரன், முதல்வரின் 3 வயது பேரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Summary:

chandrababu nayuthu grandson have more property than him

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வருடந்தோறும் தனது சொத்துகணக்கை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பை சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷ் சமீபத்தில் வெளியிட்டார். அதன்படி சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 81.83 கோடி ஆகும்இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு மட்டும் ரூ.8.30 கோடிக்குச் சொத்து உள்ளது.ஆனால்  அவருக்குக் கடன் ரூ. 5.31 கோடி உள்ளது.

மேலும் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரிக்கு ரூ.31.01 கோடி சொத்து உள்ளது. இவருக்கு ரூ.22.25 கோடி கடனும் இருக்கிறது.

மேலும் இவற்றையெல்லாம் தாண்டி 3 வயதே ஆன சந்திரபாபுவின் பேரன் நரா தேவனேஷ் பெயரில் ரூ.18.71 கோடி சொத்து உள்ளது.தனது தாத்தாவை  விட 3 வயது பேரன் அதிக சொத்து வைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement