தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#பாமக : வடை சுட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்.!
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் திமுக என்று மும்முனை போட்டி நிலவுகிறது.
பாஜக மற்றும் அதிமுக இரண்டும் ஒரே கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளது.
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பாமக போட்டியிடும் இடங்களில் கூட்டணி கட்சியான பாஜக மற்றும் மற்ற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கூட்டணியின் அடிப்படையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் கவிஞர் திலகபாமா போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவரை ஆதரித்து பாஜக மற்றும் பாமக தொண்டர்கள் அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அதன் ஒரு பகுதியாக டீக்கடை ஒன்றில் வேலை செய்யும் பெண்களுடன் சேர்ந்து வடை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.