நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் - பாஜக அண்ணாமலை!Annamalai speech about ADMK and TTV dinakaran

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ttv dinakaran

இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இவர்கள் இருவருக்கு தான் போட்டி என்று கூறப்படுகிறது. தற்போது வரை யார் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்றும் இருவரில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தேனியில் தமிழக மாவட்ட தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்ரீ ராமரை போல 16 ஆண்டுகள் வனவாசத்தை குடித்துக்கொண்டு தினகரன் எந்த தேர்தலில் களம் காண்கிறார் எனவும் ஜெயலலிதாவை போலவே டிடிவி தினகரன் அரசியல் செய்கிறார் எனவும் கூறியுள்ளார்.

ttv dinakaran

தொடர்ந்து பேசிய அவர், டிடிவி தினகரன் கையில் அதிமுக முதலில் சென்றிருந்தால் ஸ்டாலின் இந்நேரம் முதல்வராகி இருக்கமாட்டார். அதிமுகவினர் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் தான் உள்ளனர். இந்த தேர்தலுக்குப் பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.