லட்டு போல பக்கா பிளான்: 12 கட்சிகளுடன் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: பலே திட்டத்துடன் காய்நகர்த்தும் எடப்பாடி..!AIADMK Plan to make a Strong Alliance for 2024 Parliament Election 

 

அதிமுக-பாஜக கூட்டணியானது முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்க அதிமுக வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பாஜகவை மட்டும் தற்போது தள்ளி வைத்துள்ள அதிமுக, தனது தலைமையில் இணைந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உட்பட ஒன்பது கட்சிகளை வைத்து மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் திட்டமிட்டு இருக்கிறது. 

மேலும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்த வருவதாகவும் கூறப்படுகிறது. பாஜகவை பொருத்தமட்டில் அதிமுகவுடன் கொண்ட கூட்டணி முடிவை அக்கட்சியின் தலைமையிடம் முழுமையாக விரும்பவில்லை என்றாலும், மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேருவதற்காக முயற்சித்து வருகிறது. 

அதேபோல, அதிமுகவும் தனது கூட்டணி கட்சிகள் மட்டும் அல்ல, எதிர்க்கட்சியில் உள்ள சில கட்சிகளுக்கும் கூட்டணி தொடர்பாக அழைப்பு கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி இருந்தார். 

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மற்றும் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள முஸ்லிம் சிறை கைதிகளின் விடுதலை தொடர்பான விஷயத்துக்கு பேசியதாக கூறப்பட்டாலும், திரை மறைவில் அவர்களுக்குள் கூட்டணி குறித்து பேசி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதைப்போல, எஸ்டிபிஐ கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைவதற்கு காய் நகர்த்தி வருவதாகவும் தெரிய வருகிறது. அதிமுக தலைமையின் கணக்குப்படி 11 முதல் 12 கூட்டணி கட்சிகளை வைத்து மெகா கூட்டணியாக உருவாக்க எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருவதாகவும் தெரியவருகிறது. 

அதன்படி,, தோழமைக் கட்சிகள் மற்றும் பிற புதிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.