பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாத்தியமா.? - எடப்பாடி பழனிச்சாமி பதில்.!

பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாத்தியமா.? - எடப்பாடி பழனிச்சாமி பதில்.!



admk-will-never-team-up-with-bjp-edappadi-palanisamy

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு பொது தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த வருடம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

politicsஇதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கட்சிகள் தனித்தனியாக தங்களது தலைமையில் கூட்டணி அமைக்க மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவி வருகிறது. அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சில நாட்களுக்கு முன்பு அதிமுகவிற்கான கூட்டணி கதவுகள் திறந்திருக்கிறது என அறிவித்திருந்தார்.

politicsஎனினும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக கூறி வந்தனர். எனினும் தற்போது பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் கட்சி பாரதிய ஜனதாவுடன் எப்போதும் கூட்டணி அமைக்காது  என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். மேலும் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.