ரஜினிக்கு அறிவு இல்லை; வைரலாகும் நடிகை கஸ்தூரி-ன் சாடல்

ரஜினிக்கு அறிவு இல்லை; வைரலாகும் நடிகை கஸ்தூரி-ன் சாடல்


Actress Kasturi Slams Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது பற்றி கருத்து கேட்கப்பட்டபோது, 'எந்த 7 பேர்?' எனக் கேட்டார். 
முதல்வராக வேண்டும் என கனவு காணும் ரஜினிக்கு அறியாமை பொருத்தம் இல்லை என நடிகை கஸ்தூரி சாடியிருக்கிறார்.
ரஜினியின் இந்தக் கருத்தை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் #எந்த7பேர் என்ற ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் இது பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

கஸ்தூரி
"தமிழகத்தில் 20 ஆண்டுகளாக வாழ்ந்த எவரும் ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை தெரியாமல் எப்படி இருக்க முடியும். திருவாளர் ரஜினியின் இதயம் சரியான இடத்தில் இருக்கலாம். இருந்தாலும் அவர் தமிழகப் பிரச்சினைகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். இது ஒன்றும் அப்பாவித்தனம் இல்லை. இது அறியாமை. இன்னும் மோசமாக சொல்ல வேண்டும் என்றால் அக்கறையின்மை.” என்று பதிவிட்டரார்.

கஸ்தூரி
மேலும், “ரஜினி சாரின் பொறுப்புணர்ச்சி குறித்து எல்லோரும் என்னிடம் விளக்கிக் கொண்டிருக்கின்றனர். அவருக்கு அந்த 7 பேர் யாரென்றே தெரியாது என்று நான் சொல்லவில்லை. அவரே ஒப்புக் கொள்கிறார், அந்த விவகாரத்தில் நடப்பு விஷயத்தை அறியவில்லை எனக் கூறுகிறார். இது முதல்வர் ஆசை கொண்ட ஒருவருக்கு நிச்சயமாக பொருத்தமானது அல்ல. இதற்கு பதிலளிக்க எந்த விளக்கத்தையும் சொல்லத் தேவையில்லை. கடந்த சில நாட்களில் செய்திகளை வாசித்திருந்தாலே எந்த 7 பேர் என்பதையும் அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். பத்திரிகையாளர்களும் கேள்வியில் மிகத் தெளிவாக ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை எனக் குறிப்பிட்டுக் கேட்கின்றனர்.” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

“தலைவர்கள் அரசியல் அறிவை அன்றாடம் தீட்டி வைத்திருக்க வேண்டும்" எனவும் ரஜினிக்கு மறைமுகமாக அட்வைஸ் செய்திருக்கிறார்.இதை பத்தின உங்களின் கருதுகைளை பதிவு செய்யலாமே  ..