அரசியல் தமிழகம்

முக்கிய கட்சியில் இணைந்த காமெடி நடிகர் செந்தில்.! சூடுபிடிக்கும் அரசியல் களம்.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது வேட்பாளர் நேர்காணல், தேர்தல் அறிக்கை என பல கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

சமீப காலமாகவே திரை பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா இருக்குவரை அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்துவந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமமுகவில் இணைந்தார். அவர் அமமுகவின் அமைப்புச் செயலாளராக டிடிவி தினகரானால் நியமிக்கப்பட்டார். சமீப காலமாக நடிகர் செந்தில், கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாததால் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து செந்தில் நீக்கப்பட்ட நிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.


Advertisement