BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அதிர்ச்சியில் திரையுலகம்! தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ராஜேஷ் திடீர் மரணம்!
திரையுலகில் பேரதிர்ச்சி: நடிகர் ராஜேஷ் காலமானார்
தமிழ் திரைப்படங்களின் அழகான பரிணாமத்தில் தனித்த அடையாளம் பதித்தவர் நடிகர் ராஜேஷ். அவரது திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 49 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றிய இவர், 150க்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாகவும், துணை மற்றும் குணச்சித்திர வேடங்களில்ளும் நடித்துள்ளார். திரைப்படத்துக்கு அப்பாலும், உணவகம், வீடு நிலம் வணிகம், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டார். மேலும், ஆங்கில திரைப்பட நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகளை தமிழில் எழுதிய எழுத்தாளராகவும், ஜோதிடக் கட்டுரைகளையும் எழுதிய ஆர்வலராகவும் செயல்பட்டுள்ளார். பெரியாரின் சிந்தனைகளால் பாதிக்கப்பட்ட இவர், கிறிஸ்தவமாக இருந்தும் மதச்சார்பில்லா சமூக சீர்திருத்த நோக்கில் பங்களித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தலைவர் பட்டுக்கோட்டை தாவிசு வனத்திராயரின் பேத்தி ஜோன் சிலிவியா வனத்திராயரை மணந்தார். இவர்களுக்கு திவ்யா என்ற மகள், தீபக் என்ற மகன் உள்ளனர். மனைவி 2012இல் காலமானார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. அஜித் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில் மே 29ஆம் தேதி இன்று காலை 8 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 8:15 மணியளவில் உயிரிழந்தார். மறைவு நேரத்தில் அவருக்கு வயது 75. நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

அமெரிக்காவில் உள்ள அவரது மகள் மே 31ம் தேதி சென்னை வந்தடைந்து, ஜூன் 1ம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரையுலகிலும், சின்னத்திரையிலும் பன்முகத் திறமையுடன் திகழ்ந்த ராஜேஷின் மறைவு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கே ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இதையும் படிங்க: வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்...