பறவையை காப்பாற்ற முயன்ற இளைஞன் பரிதாப பலி.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!

பறவையை காப்பாற்ற முயன்ற இளைஞன் பரிதாப பலி.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!


Young Man Got Electrocuted to Death While Trying to Save Bird

மிகவும் உயரமான மின்கம்பத்தில் சிக்கிய ஒரு பறவையை காப்பாற்ற முயன்ற ஒரு இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. 

இந்த இளைஞன் ஒரு மின்கம்பத்தில் சிக்கிய ஒரு பறவையை காப்பாற்ற முடிவுசெய்து, கையில் ஒரு குச்சியை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த கம்பத்தின் மேலே எறி அந்த பறவையை மீட்க முயற்சி செய்கிறார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து அந்த இளைஞன் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பொதுவாக மின்கம்பத்தில் ஏறும் போதெல்லாம் மின்சார வல்லுநர்கள் தங்கள் வேலையில் பயன்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தான் ஏறுவார்கள். ஆனால் அந்த இளைஞன் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி பறவையை காப்பாற்ற முயன்றபோது, ​​அவர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தயவு செய்து மின்சாரம் சம்பத்தப்பட்ட விவகாரத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு முதலில் தகவல் கொடுங்கள் என்பதே.. இந்த வீடியவை பார்த்த பலரின் கருத்துக்களாக உள்ளது.