பணத்தை எப்படி சேமிப்பது என கேட்ட பெண்! அவருக்கு வந்துள்ள பதில்களை பாருங்கள்!Woman asks for tips to save money Invest in onions

பணம் சம்பாதிக்கவேண்டும், சம்பாரித்த பணத்தை சேமிக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அந்த வகையில் பணத்தை எப்படி சேமிப்பது? யாரவது சொல்லிக்கொடுங்க, நான் உங்களுக்கு பணம் தரேன் என்று வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் டிவிட் செய்துள்ளார்.

இதற்கு வழக்கம்போல் நக்கலாக பதிலளித்துள்ளார்கள் நெட்டிசன்ஸன். அதில் ஒருவர், வெங்காயத்தில் முதலீடு செய்யுங்கள், உங்கள் பணம் பலமடங்கு உயரும் என்பதுபோல் பதிலளித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளதும், அதனை வைத்து பல்வேறு விதமான காமெடி வீடியோக்கள், மீம்கள் வருவதும் வழக்கமாகிவிட்டது.

Onion price

இதனை மனதில் வைத்து, வெங்காயத்தில் முதலீடு செய்யுங்கள் என அந்த நபர் கூறியுள்ளார். மேலும், பணத்தை என்னிடம் கொடுங்கள் நான் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறேன், எல்லா பேங்க் சம்மந்தப்பட்ட செயலிகளை நீக்குங்கள், சலுகை என நம்பி பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள் என பலரும் பலவிதமான வழிகளை அந்த பெண்ணிற்கு கூறியுள்னனர்.