குளிர்காலத்தில் பாலியல் உறவு மேம்பட வேண்டுமா? டாக்டர் சொல்லும் சூப்பர் டிப்ஸ்.!
மழைக்காலத்துக்கு பின் வரும் குளிர்காலம் ஜிலென்ற வானிலை நிலவும் என்றாலும், இது மறைமுகமாக பாலியல் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும். ஆதலால், இந்த சமயத்தில் எப்படி தம்பதிகள் பாலியல் உறவை மேம்படுத்தலாம் என்பதற்கான மருத்துவ விளக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிறப்புறுப்பு வறட்சி:
குளிர்காலத்தில் நிலவும் வறண்ட குளிர் மற்றும் வெப்பநிலை, ஆண்களின் அந்தரங்க ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும். பாலியல் உந்துதல், ரத்த ஓட்டம், கருவுறுதல், ஹார்மோன் சமநிலை போன்ற விஷயத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். குளிர்கால காற்று உடலின் உட்புற வெப்பத்துடன் இணைந்து பிறப்புறுப்பு பகுதியில் வறட்சியை ஏற்படுத்தும். இதனால் pH அளவு குறைவான சோப்பு பயன்படுத்த வேண்டும். குளித்ததும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம். இதனால் அரிப்பு பிரச்சனை சரியாகும்.
இதையும் படிங்க: எக்கச்சக்க நன்மைகளை தரும் நெல்லிக்காய்! ஆனால் இவர்கள் மட்டும் இதை சாப்பிடக் கூடாது! யாரெல்லாம் தெரியுமா?
உடை தேர்வில் கவனம்:
குளிர்காலத்தில் கோடைகாலத்தை போல தளர்வான மற்றும் காற்றோட்டம் கொண்ட பருத்தி ஆடைகளை, உள்ளாடைகளை அணியாமல். சிந்தடிக் மற்றும் பாலிஸ்டர் உடைகள் வெப்பம், வியர்வையை தக்கவைக்கும். இது பாக்டீரியா, பூஞ்சை வளர்ச்சிக்கு காரணமாக செயல்படும். சரியாக அந்தரங்க உறுப்புகளை கழுவுதல், நன்கு உணர்த்துவது, அந்தரங்க முடிகளை வெட்டுவது நல்லது. இதனால் தடிப்புகள், தொற்று அபாயம் குறையும். குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை தக்கவைக்க ரத்த நாலாம் இயற்கையாக சுருங்கும். இதனால் விறைப்புத்தன்மையும் பாதிக்கப்படும்.

உணவில் மாற்றங்கள்:
நீரழிவு நோய், கொலஸ்ட்ரால், உயர் ரத்த ழடுகம் போன்றவை விறைப்புத்தன்மையை கேள்விக்குறியாக்கும். தினமும் உடலின் செயல்பாடுகளை அதிகரித்தல் இதனை சரிசெய்யும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஜாகிங் நல்லது. குளிர்காலத்தில் ஆரஞ்சு, நெல்லிக்காய், கீரை, தக்காளி போன்றவை நல்லது. இது விந்தணுவை சேதப்படுத்தும் தன்மையை எதிர்த்து போராடும். நட்ஸ், விதை, பருப்பு வகைகள், மீன் போன்றவை ஊட்டச்சத்துக்களை வழங்கும். இதனால் டெஸ்டோஸ்ட்டிரோன் அளவு அதிகமாகும். மலட்டுத்தன்மை அபாயம் குறையும்.
தண்ணீர் குடிக்கலாம்:
குளிர்காலத்தில் நீர்ச்சத்து முக்கியம் என்பதால், தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல, மனநிலையை பாதிக்கும் ஹார்மோனையும் குளிர் கட்டுப்படுத்தும் என்பதால், சூரிய ஒளி உடலில் படுதல், யோகா, தியானம் செய்வது நல்லது. இரவில் 7 மணிநேரம் முதல் 9 மணிநேரம் வரை உறங்க வேண்டும். வைட்டமின் டி உணவுகளை தேடி சாப்பிடலாம். சூரிய ஒளி வைட்டமின் டி-க்கு சிறந்த மூலதனம் ஆகும். சந்தேகங்கள் இருப்பின் மருத்துவரின் அறிவுரையை நடுவது நல்லது.
இதையும் படிங்க: Cough Problems: குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லையா? நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்.!