லைப் ஸ்டைல்

கணவரை இழந்த பெண் பொட்டு வைக்கலாமா? அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய அறிவியல் விளக்கம் இதோ!!

Summary:

widow girl can put bindi

அன்றைய காலகட்டத்திலேயே நமது முன்னோர்கள் வழக்கங்கள் என்ற பெயரில் பல அறிவியல் பூர்வமான முறைகளை பின்பற்றி வந்துள்ளனர். தற்போது அவையெல்லாம் மூடப் பழக்கங்கள் என கூறப்பட்டாலும், ஒவ்வொரு வழக்கத்திற்கு பின்பும் அறிவியல் சார்ந்த காரணங்கள் நமக்கே தெரியாமல் ஏராளமாக உள்ளது.

அவ்வாறு நாம் நெற்றியில் பொட்டு வைப்பதிலும் அறிவியல் சார்ந்த ஓர் உண்மை மறைந்துள்ளது. பொட்டு வைப்பது என்பது ஆண், பெண் என எல்லோரும் செய்யக்கூடிய ஒன்று.  நமது இது புருவங்களுக்கும் மத்தியில் நமது உயிர் ஓட்டத்தை தூண்டக்கூடிய ஆக்கினை என்னும் மையம் உள்ளது. அதனை நாம் தொட்டு பொட்டு வைக்கும் போது அப்பகுதியில் உருவாகும் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது.மேலும் உடல் ஆரோக்கியத்துடன் வைக்கப்படுகிறது.

கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது க்கான பட முடிவு

மேலும் திருமணமான பெண்கள் தங்களது நெற்றியின் நடுவில் வகுடு பகுதியில் குங்குமம் வைப்பார்கள். அவ்வாறு அவர்கள் நெற்றியில் வகுடு பகுதியில் தொட்டு குங்குமம் வைப்பதால் அவர்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதாவது அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. மேலும் அவர்களது கர்ப்பப்பையும் நன்றாக வலுப்பெறுகிறது.

இவ்வாறு பெண்கள் இல்லற வாழ்வில் ஆர்வத்துடன் ஈடுபடவும், அவர்களது கர்ப்பபை நன்கு வலுவடையவே திருமணத்திற்கு பிறகு நெற்றி வகுடுபகுதியில் பொட்டு வைக்கவேண்டும் என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

கணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்கக் கூடாது க்கான பட முடிவு

மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வளைகாப்பு செய்யும் போது அனைவரும் நெற்றி வகுடு பகுதியில் தொட்டு பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்வர். அதனால் அவர்களது கர்ப்பப்பை நன்கு வலுப்பெற்று சுகப்பிரசவம் நடைபெறுகிறது, மேலும் குறைபிரசவம் தடுக்கப்படுகிறது.

மேலும் கணவனை இழந்த பெண்ணிற்கு பாலியல் தூண்டுதல் இருக்கக் கூடாது என்பதற்காகவே நெற்றி வகுடு பகுதியில் பொட்டு வைக்கக்கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளனர் ஆனால் நாளடைவில் அதுவே கணவனை இழந்த பெண்கள் பொட்டு  வைக்கக்கூடாது என மாறியது. இரு புருவங்களுக்கு மத்தியில் ஆண் பெண் என அனைவரும் எப்பொழுதுமே பொட்டு வைக்கலாம்.


Advertisement