மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து தான் சாப்பிடனும்.. ஏன் தெரியுமா.?!

மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து தான் சாப்பிடனும்.. ஏன் தெரியுமா.?!



Why Mango should soak before eat 

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் பழம் மாம்பழம் தான். இந்த மாம்பழத்தை சாப்பிட ஒரு கண்டிஷன் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது என்னவென்றால் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மாம்பழத்தை ஊற வைக்க வேண்டும் என்பதுதான். இது இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் இல்லை.

பழங்காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்ட பாரம்பரிய முறைதான். இவ்வாறு மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைப்பதற்கு காரணம் அதில் உள்ள பைடிக் அமிலம். தண்ணீரில் ஊற வைக்கும் போது அந்த அமிலம் அகற்றப்படுகிறது. நாம் ஊற வைக்காமல் சாப்பிடும் போது உடலில் அதிகப்படியான பைடிக் அமிலம் சேருவதால் உடல் கூடுதல் வெப்பத்திற்கு ஆளாகிறது. 

மாம்பழம்

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்காமல் சாப்பிட்டால், பைடிக் அமிலமும் உடலில் சேரும். அவை கூடுதல் வெப்பத்தை உருவாக்குகின்றன. இவ்வாறு சாப்பிட்டால் உடலில் வெப்பம் அதிகமாகின்றது. இதனால் வாந்தி, பேதி உள்ளிட்டவை ஏற்படுகின்றன. ஊற வைத்து சாப்பிடும்போது இவ்வாறு நடக்காது. அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தாலே அந்த தோலில் இருக்கும் எண்ணெய் அனைத்தும் வெளியேறிவிடும்.

சிலருக்கு இந்த எண்ணெய் சேராது. மேலும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் பல இருக்கின்றன. தண்ணீரில் ஊற வைக்கும்போது அவை தானாகவே நீங்கி விடுகின்றன. தண்ணீரில் ஊற வைக்காமல் சாப்பிடும் போது தோலில் கொப்பளம், அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும். ஊற வைத்து சாப்பிடும் போது சுவை அதிகமாகவதுடன் உடலுக்கு ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. 

மாம்பழம்

ஃப்ரிட்ஜில் இருந்து தானே நாம் எடுத்து சாப்பிடுகிறோம் என்று அப்படியே மாம்பழத்தை சாப்பிடக் கூடாது. அதை அரை மணி நேரம் ஊற வைக்கும்போது மாம்பழம் இயல்பு நிலைக்கு திரும்புவதுடன் இயற்கையாக அதில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பெண்களும், குழந்தைகளும் இதை சாப்பிடும் போது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. மாம்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கின்றன.

எனவே உடல் எடை கூடும் என்ற கவலை நமக்கு தேவை இல்லை. இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நம் உடலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கின்றன. மாம்பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை என்றால் அதில் ஜூஸ் அல்லது ஸ்மூத்தி தயாரித்து குடிக்கலாம். இதில் அதிகப்படியாக சர்க்கரை சேர்க்கக்கூடாது. பதிலாக சியா விதைகள் உள்ளிட்டவற்றை இதில் கலந்து ஸ்மூத்தி தயாரித்து சாப்பிடலாம். டயாபடிக் நோயாளிகள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு  மாம்பழத்தை குறைவாக சாப்பிடுவது நல்லது.