நாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை! முழு விவரம்!

நாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை! முழு விவரம்!


What should do and dont do while Lunar eclipse in tamil

இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் நாளை இரவு தொடங்க உள்ளது. இந்தியாவிலும், மற்ற சில நாடுகளிலும் இதனை வெறும் கண்ணால் பார்க்க முடியும். பொதுவாக சந்திர கிரகணத்தின் போது ஒருசில விஷயங்களை செய்யவேண்டும், ஒருசில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டும். அவை என்னவென்று பாக்கலாம் வாங்க.

1 . செய்யக்கூடியவை
கிரகணம் முடிந்தபிறகு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. மேலும் கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு நன்கு குளித்துவிட்டு ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது.

மேலும், ஆலயத்தில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

lunar eclipse

2 . செய்யக்கூடாதவை
பொதுவாக எந்த ஒரு கிரகணத்தின்போதும் கர்ப்பிணி பெண்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என சொல்வது வழக்கம். எனவே நாளை தொடங்க உள்ள கிரகணத்தின் போதும் கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வர கூடாது.

மேலும், கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன.

அதேபோல, கிரகணத்தின்போது கட்டாயம் உடலுறவை தவிர்க்கவேண்டும். கிரகணத்தின்போது உறவில் ஈடுபட்டு கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும். கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.