இந்த டிப்ஸ் தெரியாம, இனி வேக்சிங் பண்ணாதீங்க.!

இந்த டிப்ஸ் தெரியாம, இனி வேக்சிங் பண்ணாதீங்க.!



waxing-tips-for-womens

அழகு தோற்றம் பெற பல பெண்கள் என்னென்னவோ செய்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த வேக்சிங். இது இளம்பெண்களின் அழகு பராமரிப்பில் சேர்ந்தவை. அடிக்கடி வேக்சிங் செய்யக்கூடிய பெண்களுக்கு சில டிப்ஸ் பார்க்கலாம் வாருங்கள். 

வேக்சிங் என்பது சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றும் முறையாகும். இதை சரியாகவும், மிக கவனமாகவும் செய்ய வேண்டும். அதே சமயம் அதற்குரிய இடைவேளையில் அந்தந்த நேரத்தில் செய்து வந்தால் தான் முடியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி சீராக பராமரிக்க முடியும். 

Waxingஇந்த காலத்து இளம்பெண்கள் தங்கள் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற பயன்படுத்தப்படும் பொருட்கள் என்னவென்றால் வேக்சிங் ஸ்ட்ரிப்ஸ், ஹாட் வேக்ஸ், கிரீம், ரேஸர் ஆகும். சிலர் பியூட்டி பார்லர் அல்லது சலூன் கடைகளுக்கு சென்று செய்து கொள்கிறார்கள். சிலர் வீட்டிலேயே செய்து கொள்கிறார்கள். 

வேக்சிங் செய்வதற்கு முன்பு முடிகளை அடிவரை வெட்டக்கூடாது. சருமத்தை அதற்கு ஏற்றார் போல் தயார் செய்து வைத்து கொள்ளவும். ஏனெனில், மெழுகு, கிரீம் போன்றவை தோலில் ஒருவித அரிப்பை ஏற்படுத்தும். சிலர் ட்ரிம் செய்து விட்டு பிறகு வேக்சிங் செய்கிறார்கள். இது மிகவும் தவறான செயல். முதலில் மெழுகை தடவி பின் ஸ்டிரிப்பை வேகமாகவும், சமமாகவும் இழுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

Waxingவேக்சிங் செய்த பின்னர் வெந்நீரில் கழுவினால் சற்று சிவந்து தடிப்பாக நேரிடும். அதனால் குளிர்ந்த நீரில் கழுவுவது நல்லது. வேக்சிங் செய்த பின்னர் சருமம் உணர்திறன் மிக்கதாக இருக்கும். இந்த சமயத்தில் சென்ட், டியொடரன்ட் போன்ற கெமிக்கல் கலந்த வாசனை திரவியங்களை உபயோகிக்கக் கூடாது.