வைட்டமின் டி குறைபாட்டால் இத்தனை விளைவுகள் ஏற்படுமா?!"

வைட்டமின் டி குறைபாட்டால் இத்தனை விளைவுகள் ஏற்படுமா?!"



Vitamin D deficiency

உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும். நம் உடலுக்கு தேவையான முக்கியமான சத்தாக வைட்டமின் டி உள்ளது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அது நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

Vitamin

உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைக்க வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி குறைபாட்டால் சோம்பல், எரிச்சல், சோர்வு ஆகியவை அடிக்கடி ஏற்படும். உணவு மற்றும் சூரிய ஒளி உடலில் படுமாறு இருத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

வைட்டமின் டி குறைபாடு எலும்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் எலும்பு முறிவு அபாயமும் ஏற்படுகிறது. வைட்டமின் டி யைப் பெற சூரிய ஒளியில் குறைந்தது அரை மணிநேரம் செலவிடவேண்டும். பசும்பால், காளான், ஆரஞ்சு, முழு தானியங்கள் ஆகியவற்றை உண்ணவேண்டும்.

Vitamin

மேலும் முட்டையின் மஞ்சள் கரு, சால்மன் மீன் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் தினமும் ஒரு ஸ்பூன் காட்லிவர் எண்ணையை உட்கொண்டால், தினசரி தேவையில் பாதி அளவு வைட்டமின் டி கிடைக்கும். மேலும் சைவ உணவு உண்பவர்கள் சோயா பால், பாதாம் பால் உட்கொள்ளலாம்.