சூப்பர் ஸ்நாக்ஸ்.. வெஜ் கட்லெட்.! சிம்பிள் ஹோம் ரெசிபி.!

சூப்பர் ஸ்நாக்ஸ்.. வெஜ் கட்லெட்.! சிம்பிள் ஹோம் ரெசிபி.!



veg-cutlet-easy-and-simple-home-recipe

எல்லாருக்கும் கட்லெட்  என்றாலே மிகவும் பிடிக்கும். கட்லெட் என்பது மாலை நேர சிற்றுண்டிகளில் ஒரு முக்கியமான உணவாகவும் கருதப்பட்டு வருகிறது. இந்த கட்லெட்டில் பல வெரைட்டிகளில் வருகிறது. சைவ கட்லெட் , அசைவ கட்லெட் பல வகைகளில் சாப்பிட்டு இருப்போம். ரொம்பவே எளிமையாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப சுலபமாக வெஜ் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 2 கப் பட்டாணி, 5 பச்சை மிளகாய், 2 பெரிய வெங்காயம், 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் மைதா, 2 துண்டு பிரட், கொத்தமல்லிமல்லி சிறிதளவு, 1 கப் புதினா தேவையான அளவு உப்பு, எண்ணெய் தேவையான அளவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Life styleசெய்முறை: முதலில் பட்டாணியை சுத்தம் செய்து கொள்ளவும். பின்  மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, புதினா,  கொத்தமல்லிமல்லி தழை  சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்த பட்டாணி , உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

Life styleமைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.  பிசைந்து வைத்துள்ள மாவை வடை போன்று தட்டி அதனை மைதா மாவில் லேசாக நனைத்து பிறகு பொடி செய்து வைத்துள்ள பிரட்டில்  பிரட்டி எடுத்துக் கொள்ளவும். ஒருகடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி வடை பதத்திற்கு தட்டி  வைத்துள்ள பட்டாணி கலவையை போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது சூடான பட்டாணி கட்லெட் தயார். இதனை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.